கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு: 112- ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112-ரன்களில் ஆல் அவுட் ஆனது.

தினத்தந்தி

அகமதாபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர் மோடி மைதானத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதில் பிங்க் நிற பந்து கொண்ட டெஸ்ட் போட்டியாக இது நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த டெஸ்டில் இந்திய அணி ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடக்க வீரர் டாம் சிப்லியும் பேர்ஸ்டோவும் ரன் எதுவும் எடுக்காமல் முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வந்த ஜோ ரூட் 17 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடி வந்த கிராவ்லியை 53 ரன்களில் அக்ஷர் படேல் வீழ்த்தினார். அபாயகரமான பேட்ஸ்மேன் பென்ஸ்டோக்ஸ் 12 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அக்சர், அஷ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 48.4- ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து,இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்