கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு

எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிப்பேன் என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

லாகூர்,

10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அனைத்து வகை கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானை வழிநடத்த பிசிபியிடம் இருந்து அழைப்பு வந்த தருணம் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் பல உயர்வையும் தாழ்வையும் நான் அனுபவித்திருக்கிறேன், ஆனால் கிரிக்கெட் உலகில், பாகிஸ்தானின் பெருமையையும் மரியாதையையும் நிலைநிறுத்துவதை முழு மனதுடனும் ஆர்வத்துடனும் நோக்கமாகக் கொண்டிருந்தேன்.

வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாக வெள்ளை-பந்து வடிவத்தில் நம்பர் 1 இடத்தை எட்டினோம். இந்த பயணத்தின் போது எங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். மூன்று வடிவங்களிலும் ஒரு வீரராக பாகிஸ்தானை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிக்க நான் இங்கு இருப்பேன்.

இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்