கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான் வீரர் படைத்த மோசமான சாதனை

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 500 ரன்களை கடந்த வீரர்களில் மிகக் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியவர் என்ற பதிவை பாபர் அசாம் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது இடத்திலும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ஹபிஸ் 111.8 ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளார். அடுத்ததாக குமார் சங்ககரா 112.2, கேன் வில்லியம்சன் 112.5, மற்றும் முகமது ரிஸ்வான் 113.0 ஸ்ட்ரைக் ரேட்டில் முறையே 3, 4 மற்றும் 5ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.