கேப்டவுன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது .ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அந்நேரம் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் மர்மமான ஒரு பொருளைக்கொண்டு பந்தினை சேதப்படுத்தும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் உலகளவில் பூதாகரமானது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் அணித் தலைவர் ஸ்மித்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் சுமித்தை ஆஸ்திரேலியா அணியில் தலைவர் பதவில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது . டேவிட் வார்னரும் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.சுமித்துக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியின் பொறுப்பு தலைவராக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீதான பந்தை சேதப்படுத்திய பிரச்சினை குறித்து விசாரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகள் குழு தலைவர் இயான் ராய், அணியின் செயல்திறன் மேலாளர் ஹோவர்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர்.சுமித்துக்கு பதிலாக அவுஸ்திரேலியா அணியில் தலைவராக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த விவகாரத்தால் உலக கிரிக்கெட் அரங்கில் கோலோச்சி வரும் ஆஸ்திரேலிய அணியின் புகழுக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. எனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஸ்டீவன் சுமித்துக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த டேவிட் வார்னருக்கும் ஆயுட்கால தடை வரை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.