கிரிக்கெட்

பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்

பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

தாகா,

வங்காள தேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு வங்காள தேச அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு நடக்க உள்ள போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜனவரி- 24, 25, 27 (மூன்று 'டுவென்டி-20') லாகூரில் நடக்க உள்ளன. மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே பிப்ரவரி 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ராவல்பிண்டியிலும், ஏப்ரல் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை கராச்சியிலும் நடக்க உள்ளன. ஒரே ஒரு ஒருநாள் போட்டி ஏப்ரல். 3ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஈசான் மணி, வங்கதேசத்துடன் போட்டிகளில் பங்கேற்பது குறித்து அட்டவணை முழுமை பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் சஷாங்க் மனோகருக்கு நன்றி என்று கூறினார்.


அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்