கிரிக்கெட்

சக வீரரை அடித்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்

சக வீரரை அடித்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டாக்கா,

தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்கா மண்டலம்-குல்னா மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் குல்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன், நேற்று முன்தினம் சக வீரர் அராபத் சன்னியை கோபத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். தனது பந்து வீச்சு திறமை குறித்து அராபத் சன்னி குறை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஷகாதத் ஹூசைனை உடனடியாக இடைநீக்கம் செய்தது. அவர் வீடு திரும்பினார். ஷகாதத் ஹூசைனுக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 33 வயதான ஷகாதத் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 38 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு