image courtesy; ICC 
கிரிக்கெட்

வங்காளதேச டி20 தொடர்; தற்காலிக கேப்டனுடன் இலங்கை அணி அறிவிப்பு

வங்காளதேசம் -இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் இலங்கை அணியின் தற்காலிக கேப்டனாக சரித் அசலன்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் இலங்கை அணியின் வழக்கமான டி20 கேப்டனான வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இதன் காரணமாகவே அசலன்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு;-

சரித் அசலன்கா ( முதல் 2 போட்டிகளுக்கான கேப்டன்), வனிந்து ஹசரங்கா ( 3-வது போட்டிக்கான கேப்டன்), குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரம, மேத்யூஸ், தீக்ஷனா, தனஞ்சயா டி சில்வா, குசல் ஜனித் பெரெரா, மதுஷங்கா, நுவான் துஷாரா, பதிரனா, அகிலா தனஞ்சயா, பினுரா பெர்னண்டோ, கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா பெர்னண்டோ மற்றும் ஜெப்ரி வாண்டர்சே.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு