கிரிக்கெட்

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம் (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி) முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஜிம்பாப்வே (2 புள்ளி) ஒரு வெற்றியுடன் வெளியேறியது. இந்த நிலையில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் டாக்காவில் நேற்றிரவு நடக்க இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்ந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் இறுதி ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் கோப்பை கூட்டாக வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்