கிரிக்கெட்

தனது 100வது டெஸ்டில் சதமடித்த வங்காளதேச வீரர்

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

மிர்பூர்,

வங்காளதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. தனது 100-வது டெஸ்டில் ஆடும் முஷ்பிகுர் ரஹிம் 99 ரன்களுடனும், லிட்டான் தாஸ் 47 ரன்களுடனம் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து அசத்தினார் இது அவரது வது டெஸ்ட் ஆகும் தனது வது டெஸ்டில் சதமடித்து முஷ்பிகுர் ரஹீம் சாதனை படைத்துள்ளார். தனது 100வது டெஸ்ட்டில் சதம் விளாசிய 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெற்றுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்