கிரிக்கெட்

பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி..!

பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

தினத்தந்தி

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் டிக்கெட் விற்கப்பட்டது. சில மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இதனால் நீண்டநேரம் காத்திருந்து ஏமாந்து போன ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மைதானத்தின் நுழைவு வாயில் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர்.

சாலையோரம் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை கீழே தள்ளினர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அவர்கள் மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்