கிரிக்கெட்

4-வது வரிசையில் பேட்டிங்....எனக்கு நிறைய தன்னம்பிக்கையை அளித்தது: டெல்லி வீரர்

இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பா கும் என்றார்.

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணிக்கு

17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்கள் விளாசி வெற்றி தேடித்தந்த டெல்லி இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி கூறு கையில்,

'நீங்கள் 4-வது வரிசையில் களமிறங்கி விளையாட போகிறீர்கள். நம்பிக்கையுடன் உங்களது இயல்பான ஆட்டத்தை ஆடுங்கள்' என்று என் னிடம் பயிற்சியாளர்கள் முன்பே கூறியிருந்தனர். உத்தரபிரதேச அணிக்காக வும், உ.பி. 20 ஓவர் லீக் போட்டியிலும் நான் 4-வது வரிசையில் பேட்டிங் செய்துள்ளேன். அதே வரிசையில் இங்கும் ஆடியது எனக்கு நிறைய தன் னம்பிக்கையை அளித்தது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பா கும். அதை சரியாக பயன்படுத்தி கொண்டேன்' என்றார்.