கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்தது பிசிசிஐ..!

அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

மும்பை,

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 20- ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்த 7-வது சீசன் தொடங்குவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தத் தொடரில் இந்திய அணி புது சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இந்த சீருடையை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்