கோப்புப்படம் 
கிரிக்கெட்

சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி, மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. .

இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உட்லாண்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் அப்தாப் கான், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்