கிரிக்கெட்

பச்சை நிற ஜெர்சியுடன் நாளை களம் காணுகிறது பெங்களூரு அணி - இதற்காக...

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளைய தினம் விளையாடுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

இதன்படி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உருவான பச்சை நிற ஆடையை (ஜெர்சி) அணிந்து அவர்கள் விளையாட உள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் தேவை மற்றும் இயற்கையை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றனர்.

இதுபற்றி அந்த அணியின் சி.ஓ.ஓ. ராஜேஷ் மேனன் கூறும்போது, பெங்களூரு அணியின் கலாசார மற்றும் சமூக ஆற்றலை உயர்த்தும் நோக்கத்திலும், இயற்கை பாதுகாப்பை நோக்கிய சிறிய முன்னெடுப்புகளுக்காக ரசிகர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உந்துதலை ஏற்படுத்தவும் இதனை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை