உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 153 வீரர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இந்திய வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்று தகவல் கிடைத்து இருக்கிறது.
இதுபற்றி கிரிக்கெட் வாரியம் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பிடம் இருந்து எந்த அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை. இதனால் வீரரின் பெயரை வெளியிடும் நிலையில் நாங்கள் இல்லை என்றார்.
ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.