கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் ரிஷப், கார்த்திக் இருவரும் விளையாட வேண்டும்: சொல்கிறார் புஜாரா

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவருமே விளையாடவேண்டும் என புஜாரா கூறுகிறார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை நோக்கி வீரர்களை தேர்வுசெய்து வருகிறது. விக்கெட் கீப்பர் வரிசையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை ஆடும் லெவன் அணியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படவேண்டுமா, அல்லது ரிஷப் பண்ட் செயல்படவேண்டுமா என்ற விவாதம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், அணியில் இருவருமே விளையாடவேண்டும் என்கிறார் இந்திய வீரர் செதேஸ்வர் புஜாரா. இதுகுறித்து அவர் கூறும்போது, நம்பர் 5 இல் ரிஷப், 6 இல் ஹர்திக் மற்றும் 7 இல் தினேஷ் கார்த்திக் விளையாடவேண்டும் என்று கூறுகிறார்.

இந்திய அணி ஒருவேளை கூடுதல் பந்துவீச்சை தேர்வுசெய்தால், தீபக் ஹூடா அணியில் இருப்பார் என்றும், அவர் ரிஷப் பண்டுக்கு பதிலாக அணியில் இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?