image credit: ndtv.com 
கிரிக்கெட்

இந்திய மேட்ஸ்மேனான இவர் மிகப்பெரும் நட்சத்திரமாக வருவார்: சொல்கிறார் பிரண்டன் மெக்கல்லம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், இந்திய பேட்ஸ்மேன் ஒருவரை புகழ்ந்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரை புகழ்ந்துள்ளார். அது கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான ஸ்ரேயஸ் அய்யர் ஆவார். ஸ்ரேயஸ் அய்யர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருவார் என்று பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஸ்ரேயஸ் அய்யர் இந்திய கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நான் ஸ்ரேயசை வெகு தொலைவில் இருந்து ரசித்திருக்கிறேன். அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும்போதும், நான் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடும்போதும் அவரைச் சந்தித்தேன்.

அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், தலைமைப்பொறுப்பை நிர்வகிப்பதில் சிறந்தவராகவும் உள்ளார். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். அவர் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக வளர்வார். மேலும், கொல்கத்தா அணியில் சில ஆண்டுகள் அவரது சிறந்த பங்களிப்பை அளிப்பார். ஸ்ரேயசுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி". இவ்வாறு பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு