கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணியை 110 ரன்களில் சுருட்டியது மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 111 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கமே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டிரெண்ட் பவுல்ட் பந்து வீச்சில் டெல்லி அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், டெல்லி அணியின் ரன் வேகம் துவக்கத்திலேயே தடை பட்டது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட் செய்கிறது. பந்து வீச்சை பொருத்தவரை மும்பை அணியில் அதிகபட்சமாக பவுல்ட் , பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை