கிரிக்கெட்

வைரலாகும் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு.. ரசிகர்கள் குழப்பம்

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

தினத்தந்தி

 மும்பை,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனால் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்ததும் பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆதரவு என்பதில் பார்வையாளர்கள் அரங்கில் ஒருவர் மட்டுமே இருப்பது போன்றும், வாழ்த்துகள் என்பதில் நிறைய பேர் இருப்பது போன்றும் பதிவிட்டுள்ளார். பும்ரா எதற்காக இப்படி பதிவிட்டுள்ளார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?