Image Courtesy : PTI  
கிரிக்கெட்

சச்சின் தெண்டுல்கரின் 100 சதத்தை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா ? - ரவி சாஸ்திரி பதில்

தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 போட்டி , ஒருநாள் போட்டி 46 , டி20 போட்டி 1) அடித்துள்ளார்.

இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம். விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது