image courtesy; twitter/@CPL 
கிரிக்கெட்

கரீபியன் பிரீமியர் லீக்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்....!!

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கயனா,

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 இன்று (வியாழன்கிழமை) நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஒவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் 39 பந்துகளில் 49 ரன்களும், விக்கெட் கீப்பர் அசாம் கான் 27 பந்துகளில் 36 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜமைக்கா தல்லாவாஸ்- கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-2 ஆட்டம் 23-ந்தே நடைபெற இருக்கிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்