சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இதற்கிடையில், தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் எந்த விதிமீறலும் இல்லை என கூறிய நீதிபதிகள், 2வது போட்டியையும் கண்டு ரசியுங்கள் என மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.