கிரிக்கெட்

’கோப்பைகளை கொண்டாடுங்கள், தனி நபரின் சாதனையை அல்ல’- கவுதம் கம்பீர்

நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றப்பின் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசினார். அப்போது "கிரிக்கெட்டில் தனி நபரின் சாதனை முக்கியமில்லை" என கூறினார் . அவர் பேசுகையில்,

"நாம் கோப்பைகளை கொண்டாட வேண்டும், தனி நபர்களின் சாதனையை அல்ல. சஞ்சுவின் கடைசி 3 மேட்ச்களில் அவர் சதத்தை நோக்கி ஆடாமல் இருந்தது ஒரு உதாரணம். கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடும் விளையாட்டு, அதில் தனி நபர்களின் சாதனைகள் முக்கியமில்லை" என்றார்.