image courtesy: PTI 
கிரிக்கெட்

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கும் சாஹல்.. எத்தனை கோடி தெரியுமா..? வெளியான தகவல்

தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.

இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து கேட்டு முறையிட்டுள்ளனர். மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம், அவரது முன்னாள் மனைவி தன ஸ்ரீ ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு சாஹல் ஒப்புக்கொண்ட நிலையில் ரூ. 2.37 கோடி ஏற்கனவே கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள தொகையை விவகாரத்துக்கு பின்னர் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு