பெங்களூரு,
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடிய இந்திய வீரரான தீபக் சாஹரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அவரை சென்னை அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணி இதுவரை பிராவோ, ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.