கிரிக்கெட்

சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் ; சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வருத்தம்

சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது . இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். #IPL2018 #CSK

சென்னை,

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் மைதானம் அமைந்து உள்ள சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மோசமான நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

 இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளியாகியது.  

சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப். 14ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

இதை தொடர்ந்து சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது' என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Very sad that we have to play our remaining home games away from Chennai. Feeling for the players and the fans but also hoping for a peaceful and swift resolution to the current problems. Thanks for the incredible support of all the Csk fans

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்