கிரிக்கெட்

பலத்த பாதுகாப்புடன் தனித்தனி கார்களில் சென்னை வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பினர்

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி கார்களில், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினர். #IPL #Csk

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. பல அமைப்புகள் போட்டியை காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன. பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் கடும் எதிர்ப்புகளால் இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நாளை நடைபெறும் போட்டியை முன்னிட்டு, சென்னை அணி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு வீரர்கள் வந்தனர். அதேபோல், பயிற்சிக்கு பிறகு, முன்னும் பின்னும் போலீஸ் ரோந்து வாகன பாதுகாப்புடன் தனித்தனி கார்களில் சென்னை வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை