கிரிக்கெட்

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

சென்னை,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இந்தியா வந்துள்ளது.

இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 83 (66), தோனி 79 (88), ஜாதவ் 40 (54) ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கவுண்டர்-நைல் 3, ஸ்டோன்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...