கிரிக்கெட்

அம்புரோஸ் விமர்சனத்திற்கு கிறிஸ் கெய்ல் பதில்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்புரோஸ் கூறிய கருத்துக்கு கிறிஸ் கெய்ல் பதிலளித்துள்ளார்.

துபாய்,

கிறிஸ் கெய்ல் சமீப காலமாக சரியாக ஆடவில்லை. அதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவனில் அவரை சேர்ப்பதில் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்லி அம்புரோஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்துள்ள அதிரடி வீரர் 42 வயதான கிறிஸ் கெய்ல், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அம்புரோஸ் இவ்வாறு விமர்சிக்கிறாரா? என்பது தெரியவில்லை. அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. எப்போது அவரை பார்த்தாலும் எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுவேன்.

மற்ற முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இதே போல் 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது? என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்