கிரிக்கெட்

பிக்பாஷ் கிரிக்கெட்டில் கிறிஸ் லின் சிக்சர் மழை

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் லின் சிக்சர் மழை பொழிந்தார்.

தினத்தந்தி

சிட்னி,

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சிட்னியில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட்-சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. கேப்டன் கிறிஸ் லின் 94 ரன்கள் (35 பந்து, 4 பவுண்டரி, 11 சிக்சர்) நொறுக்கினார். தொடர்ந்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த 29 வயதான கிறிஸ் லின், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அவரை அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டதால் இப்போது அவரை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு