கிரிக்கெட்

இங்கிலாந்து அணியுடன் மோதுவது எப்போதும் சவாலாக இருக்கும் :ஆரோன் பிஞ்ச்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

துபாய்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது .

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குஷால் பெரைரா, நிசாங்கா தலா 35 ரன்கள் எடுத்தனர்

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார் .

இந்த போட்டியில் ஆடம் ஜாம்பா 4 ஓவர்கள் வீசி 12 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

போட்டிக்கு பின்னர் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம். ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினர். ஆடம் ஜாம்பாவுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு