கோப்புப்படம்  
கிரிக்கெட்

கூச்பெஹார் டிராபி; இரட்டை சதமடித்து அசத்திய சேவாக்கின் மகன்

மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) ஷில்லாங்கில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

ஷில்லாங்,

இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு போட்டிகளில் ஒன்று கூச்பெஹார் டிராபி. இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 4 நாள் கொண்ட போட்டி ஆகும். இதில் மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்)  ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 468 ரன் குவித்து 208 ரன் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக்கின் மகனான ஆர்யவீர் 34 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசி (229 பந்து) களத்தில் உள்ளார்.

ஆர்யவீர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதான ஆர்யவீர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்து வருவதாக ஏற்கனவே ஷேவாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்