கிரிக்கெட்

துபாய் சென்றுள்ள சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

சென்னை,

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக அமீரகம் சென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. குழுவாக சென்ற 51 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

வீரர்கள், அணி நிர்வாகிகளுக்கான தனிமைப்படுத்தலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஐபிஎல் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட கடந்த 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் சென்றது சென்னை அணி.

சிஸ்கே அணியினருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் ஐபிஎல் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.