கிரிக்கெட்

கொரோனா வைரஸ் எதிரொலி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்தியா விலகல்

கொரோனா வைரஸ் எதிரொலியாக, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்தியா விலகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சைப்ரஸ் நாட்டில் உள்ள நிகோசியாவில் வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி 2-ந் தேதி புறப்பட திட்டமிட்டு இருந்தது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவுரையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்தியர்களுக்கு தடை விதித்து இருந்தது. இதன் அடிப்படையில் இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இந்திய அணி விலகுவதாக நேற்று அறிவித்தது. இதேபோல் டெல்லியில் வருகிற 15-ந் தேதி தொடங்க இருக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து பல நாடுகள் விலகியது நினைவுகூரத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை