கிரிக்கெட்

டெல்லி கேபிட்டல்ஸ் வீரர்களின் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்கள் திருட்டு..! அணி நிர்வாகம் அதிர்ச்சி

எவ்வாறு காவல்துறையின் உதவியைப் பெறுவது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

தினத்தந்தி

டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் இருந்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி அணியின் டேவிட் வார்னர் ,பிலிப் சால்ட் , மிட்சேல் மார்ஷ் , யாஷ் துல் உள்ளிட்ட வீரர்களின் 16 லட்சம் மதிப்புள்ள

உபகரணங்கள் மாயமாகியுள்ளது.

இந்தப் பிரச்னை தெடர்பாக எவ்வாறு காவல்துறையின் உதவியைப் பெறுவது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் டெல்லி தோல்வி அடைந்தது. ;மேலும் அடுத்த போட்டியில் நாளை கொல்கத்தா அணியை டெல்லி எதிர்கொள்கிறது .

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்