20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பி பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்த திருப்தியுடன் வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களில் எட்டியது. இந்த ஆட்டத்துடன் அயர்லாந்து இரட்டை சகோதரிகள் 35 வயதான சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.