கிரிக்கெட்

ஜனவரி 1 முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் நேரலை; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

அமேசான் பிரைம் வீடியோ கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில், கிரிக்கெட் வாரியம் ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. பல ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் (ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து போட்டிகளையும்) போட்டிகளை லைவாக பிரைம் வீடியோவில் காண முடியும்.

இந்நிலையில், வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் இடையோன டெஸ்ட் போட்டி நேரலை செய்யப்பட உள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதும் ஒளிபரப்பப்பட உள்ளது. பிரைம் வீடியோவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், இந்த போட்டிகளை லைவாக காண அனுமதிக்கப்படும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு