கிரிக்கெட்

கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலிக்கு நெருக்கடி - சோயப் அக்தர் பேட்டி

இந்திய கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மஸ்கட்,

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 7 ஆண்டுகள் வழிநடத்திய விராட் கோலி கடந்த வாரம் பதவியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு, கோலி இருபது ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார், பின்னர் தேர்வாளர்கள் ஒயிட்-பால் வடிவத்திற்கு ஒரே கேப்டனை விரும்பியதால் அவர் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், "விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு அவராக வெளியேறவில்லை. ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவருக்கு சிறந்த தருணம் அல்ல, ஆனால் அவர் என்ன செய்தார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

அவர் எஃகு அல்லது இரும்பினால் செய்யப்பட்டவரா? அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் உலகில் வேறு எவரையும் விட அதிகமாக சாதித்துள்ளார். அவர் இதிலிருந்து வெளியே வருவார் என்று நினைக்கிறேன். இதிலிருந்து அவர் முன்னோக்கிச் செல்ல வேண்டும், யார் மீதும் எந்தக் கசப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அனைவரையும் மன்னித்துவிட்டு நகர்ந்து கொண்டே இருங்கள்" என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்