சென்னை,
இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி, டி20 தொடரிலும் மரண அடி கொடுத்துள்ளது..
2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 4 நாட்களே மீதமுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை இழந்துள்ளது இலங்கை அணி.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, நேற்று இரண்டாவது போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடக்கவிருக்கிறது.