கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை

நடத்தை விதிமுறையை மீறியதால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கைதென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 20 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். எதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையில் குணதிலகாவுடன், அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி தங்கிய அவரது நண்பர் ஒருவர் நார்வே நாட்டு இளம்பெண்ணை கற்பழித்த புகாரில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது.

இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

ஏற்கனவே விளையாடிய 2 டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்