கிரிக்கெட்

‘ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்’ - கங்குலி விருப்பம்

ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த இந்த பிங்க் நிற பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல இந்த போட்டி அவசியமாகும். ஒவ்வொரு டெஸ்டும் பகல்-இரவு போட்டியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் பகல்-இரவு மோதலாக இருக்க வேண்டும். பகல்-இரவு டெஸ்டை நடத்தியதில் எனது அனுபவங்களை கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வேன். மற்ற இடங்களிலும் பிங்க் பந்து டெஸ்டை நடத்த முயற்சிப்போம். இப்போது ஒவ்வொரு வீரரும் இத்தகைய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்கள். வெறும் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை என்றார்.

அதே சமயம் இந்திய கேப்டன் விராட் கோலி, பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பது எப்போதாவது மட்டுமே நடக்க வேண்டுமே தவிர வழக்கமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு