கேப்டவுன்,
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட்அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை வென்ற தென் ஆப்பிரிக்க அணி, தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இன்றைய போட்டியில் விளையாடி வருகிறது. அதேவேளையில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கத்தில் இந்தியா விளையாடி வருகிறது.
சம்பிரதாய போட்டியாக கேப் டவுனில் நடந்து வரும் 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டி காக் சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் நிலவரப்படி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.