கோப்புப்படம் 
கிரிக்கெட்

பரோடா அணியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணியில் இணைந்தார் தீபக் ஹூடா

பரோடா அணியில் இருந்து விலகிய தீபக் ஹூடா, ராஜஸ்தான் அணியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டன் குருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறினார். இதனால் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பரோடா அணியிலிருந்து தீபக் ஹூடா விலகியுள்ளார். ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் தீபக் ஹூடா விளையாடியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இனிமேல் முதல் தர போட்டியில் ராஜஸ்தான் மாநில அணிக்காக விளையாட முடிவு செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ள தீபக் ஹூடா இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 116 ரன்கள் எடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்