Image Courtesy: AFP  
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

J.Rajachanthirakumar

துபாய்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் 231 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 202 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி (55%) முதல் இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா (50%), நியூசிலாந்து (50%), வங்காளதேசம் (50%) அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணி (43.33%) 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி (36.66%) 6வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (33.33%) 7வது இடத்திலும், இங்கிலாந்து (29.16%) 8வது இடத்திலும், இலங்கை (0.00%) 9வது இடத்திலும் உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்