கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது;

"உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள்."இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்