கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL #DD

புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை மீண்டும் சந்திக்கிறது.

டெல்லி அணி 10 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி புதுப்பொலிவு பெற்றது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டது.

ஐதராபாத் அணி தனது வெற்றிப் பயணத்தை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். அத்துடன் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முழுமையாக பறிபோய்விடும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லிடேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ஐதராபாத் அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை