கிரிக்கெட்

தேசிய கொடிக்கு டோனி அளித்த மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்

தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனி. இந்தியா மட்டும் அல்லாது உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள டோனியின் தனித்துவமான செயல்பாடுகள் அவ்வப்போது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில், தேசியக்கொடி மீது டோனி காட்டிய மதிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது டோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் அத்து மீறி கையில் தேசியக்கொடியுடன் ஓடி வந்த ரசிகர் ஒருவர், டோனியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். அப்போது தேசியக்கொடி மைதானத்தில் கீழே விழுமாறு இருந்த நிலையில், உடனே டோனி தேசியக்கொடியை தனது கைகளில் வாங்கிக் கொண்டு, ரசிகரை அனுப்பி வைத்தார். தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை