கோப்புப்படம் 
கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்...!

ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் பொறுப்பில் நியமிக்க தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் இருந்தே சென்னை அணியில் விளையாடி வரும் தோனி, சென்னை அணியின் கேப்டனாக இதுவரையில் தனது பணியை செவ்வனே செய்துவந்தார். அவர் இதுவரை சென்னை அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை