சென்னை,
ஐபிஎல் 2026 சீசனுக்காக முழு வீச்சில் தயாராகி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பின்னங்காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு பிரச்சினை காரணமாக, முதல் இரண்டு வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், சென்னை அணியின் வலைப்பயிற்சியின் போது தோனி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. தோனி மீண்டும் பயிற்சியை தொடங்கியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்டு இருப்பதால் வரும் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவேயாகும். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் படுதோல்வி அடைந்த நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வருகிறது.