கிரிக்கெட்

தீவிர பயிற்சியில் தோனி, ருதுராஜ்...சென்னை அணி வெளியிட்ட வீடியோ

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை அணி வீரர்கள் சென்னை அணியின் அகாடமி மைதனத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், தோனி ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை சென்னை அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.